ஏனுங்க , நீங்க கோயம்புத்தூருங்களா ? -2

முந்தைய பதிவுக்கு நல்லா இருக்கு அப்பிடின்னு நெறைய(நம்மளா சொல்லிக்க வேண்டியதுதான் , காசா , பணமா) பின்னூட்டங்கள் வந்தததினால் இந்தப் பதிவு தொடர்கிறது.

3.உணவு  சார்ந்த சொற்கள் :

 

1 வனக்குதல் தாளித்தல்
2 மொளவாட்டி கொழம்பு வைத்தல்  தேங்காய் , கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து விட்டு குழம்பு வைத்தல் 
3 சீடை  அரிசி மாவால் செய்யப்படும் சிறிய சிறிய உருண்டைகளான இனிப்பு 
4 தெலுவு பனை , தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர் 
5 பானக்கம்  கருப்பட்டி கலந்து செய்யப்படும் இனிப்பு நீர் 
6 கல்லக்காய் வேர்க்கடலை 
7 பொவியிலை புகையிலை
8 குச்சிக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு
9 சீம்பு மாடுகள் கன்று ஈன்ற பிறகு மூன்று நாட்களுக்கு கெட்டியாக வரும் பாலில் இருந்து செய்யப்படும் இனிப்பு. உப்பும் சேர்க்கலாம்
10 கண்டிக்கிழங்கு சக்கரைவள்ளிக்கிழங்கு(?)
11 சுக்கு காபி சுக்கு, கொத்தமல்லி ஆகிவற்றை பொடி செய்து சுடுநீரில் சர்க்கரை கலந்து செய்யப்படும்.
12 அஸ்கா  வெள்ளை சர்க்கரை 
13 கரும்புச் சக்கரை  வெல்லத்தை உடைத்துச் செய்யப்படும் சர்க்கரை /ஜாஃகிரி 
14 புளி தண்ணி   கம்பு சோற்றில் மீதமுள்ள தண்ணீரில் உப்பிட்டு குடிப்பர் 
15 கம்மஞ்சோறு  கம்பு சோறு 
16 அம்புலி  சோளச்சோறு 
17 பழைய சோறு  பொதுவாக காலையில் வயல் வேலைக்குச்  செல்வோர் , அதிகாலையில் காலை உணவுக்கு முன்ன இரவு மீந்த சாப்பாட்டில் தண்ணீரோ , மோரோ கலந்து சாப்பிட்டுவிட்டு செல்லுவர். அது ‘பழைய சோறானது’
18 கச்சாயம்  அதிரசம் 
19 ஒப்பிட்டு போளி 
20 ஓனவா , ஒனத்தியா  நாக்கிற்கு ருசியாக 
21 சீப்பை பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு , வெளியில் எடுத்தால் நடுவில் வெள்ளையாக இனிப்பானதாக நுங்கு மாறியிருக்கும்
22 பனங்கிழங்கு  பனங்கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து வளரவிட்டு கிழங்கை எடுத்து உப்புப் போட்டு  வேக வைத்து சாப்பிடுவது
23 கோசக்காய்  தர்பூசணி 
24 நவாப்பழம்  நாவல்பழம் 
25 சந்தவை  இடியாப்பம் 
26 கொள்ளுப்பருப்பு , கொள்ளு ரசம்  கொள் பயிரை வைத்து செய்யப்படும் துவையல் , ரசம்  
27 பருப்புச் சாப்பாடு   அரிசி , பருப்பு சாதம் 
28 வெள்ளாங்பூண்டு  வெள்ளை பூண்டு 
28 சீமெண்ணை  
மண்ணெண்ணெய்
29 சுண்டப்பருப்பு  முந்தைய நாள் வைத்த பருப்பை , இரண்டு அல்லது ஒரு நாள் கழித்தோ மீந்து போனால் , அடுப்பில் நன்றாக சுண்ட வைத்து சாதத்துக்குப் பிசைந்து  சாப்பிடுவர்
30 ஊனு  சாப்பிட்ட தட்டில் மிச்சமிருக்கும் கடைசி கலவை
31 ராய்க்கூழு கேழ்வரகுக் காஞ்சி
32 ரக்கிரி(லி) கீரை
33 கருஞ்சுக்கிட்டித்தழை மணத்தக்காளிக்கீரை

4.பண்டிகை சார்ந்த சொற்கள் :

 

 

1 நோம்பி (ஆடி நோம்பி) நோன்பு என்பதன் திரிபு. ஆனால் எல்லாப் பண்டிகைகளுக்கும் நோம்பி என்றே சொல்லுவது வழக்கம்.
2 போக்குவரத்து   திருமணம் நிச்சயிக்கப்படும் முன் அதே சமயம் உறுதியான பின்பு நடத்தப்படும் வைபவம். (வாங்க பழகலாம் முறையில்)
3 தெரட்டி  பூப்பு நன்னீராட்டு விழா 
4 கட்டுசாதவிருந்து  மாதமாக உள்ள பெண்களுக்கு உறவினர்கள் சேர்ந்து விருந்து வைத்தல்   
5 அடசல்  பொதுவாக சாமிக்கு நேர்ந்து கொண்ட கோழிகளை படைத்து விருந்தளிக்கும் முறையைக் குறிக்கும்  
6 சாவக்கட்டு  சேவல் சண்டை 
7 பொட்லி  கோவில்களில் வேண்டுதலின் பொருட்டு நிறைவேற்றப்படும் எழுப்பப்படும்  வேட்டுச்சத்தம் 
8 தண்டல் தப்பாட்டம் 
9 வான(ண)ம் உடுதல்  கோவில்களில் பூஜை நேரத்தில் விடப்படும் வெடி 
10 தீர்த்தத்துக்குப் போறது  எந்தக்கோவிலிலும் விஷேஷம் இருப்பின் அருகில் உள்ள காவிரி ஆற்றிக்குச் சென்று நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தல் 
11 தீர்த்தம் முத்தரித்தல்  தீர்த்தத்துக்குப்  போய்விட்டு வந்தபிறகு அந்த நீரை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதைக் குறிக்கும் .
12 மலையேறிடுச்சு பொதுவாக சாமி வந்தவர்கள் தன்னிலைக்கு வருவதைக் குறிப்பிடும் சொல் 
13 எழுதிங்கள்  திருமணமான , பெண் குழந்தைகள் பெற்ற  பெண்களுக்கு நடத்தப்படும் சீர் 
14 அருமைக்காரர்   திருமண சடங்கை , சீர்களை முன்னின்று நடத்தி வைப்பவர்  
15 ஒருசிந்தி (சந்தி) விரதம் இருத்தல்  
16 கிழமை பிடித்தல்  பொதுவாக வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை காலையில் குளித்துவிட்டு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு பூஜை செய்துவிட்டே பிற வேலைகளைச் செய்வது. மற்றபடி எல்லாக் கிழமைகளுக்கு பொருந்தும்  
17 புண்ணியாச்சினை  புதுமனைப் புகுவிழா . பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொடங்குவதற்கும் செய்யப்படும்
18 புள்ளார்   பிள்ளையார் 
19 வாக்கு கேட்டல்  சாமியாடுபவர்கள் சொல்லும் குறி  
20 சாமிக்கு விடுதல்  பொதுவாக வெள்ளாடு, எருமைக்கன்றுகளை சாமிக்கென்று நேர்ந்து விடுதல்  
21 மொதமை  கோவில்களில் முதன்மைதாரர்  
22 பட்டிப்பொங்கல்  மாட்டுப்பொங்கல் 
23 வாசப்பொங்கல்  வீட்டில் வைக்கப்படும் பொங்கல்  
24 காப்புக்கட்டு    போகி  
25 பூவிறைக்கிற நோன்பி   பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் அன்று நடைபெறும் 
26 சோமாரம்   சோமவாரம் , சுமங்கலி பூஜை   
27 கரவத்தாட்டம்  கரகாட்டம்  
28 ஆடல் பாடல்  இசைக் கச்சேரி 
29 செரவடித்தல்  
பூசாரிகள் வேப்பிலை
கொண்டு மந்திரித்தல் 
30 தயிர் மந்திரித்தல்  ஏதேனும் சிறிய அளவிலான விஷக்கடிக்கு வைத்தியம் செய்தல் 
31 பாடம் போடுதல்   மந்திரித்தல் 
32 தூறியாட்டம்  ஊஞ்சல் ஆடுவது . மஞ்சிக் கயிற்றில் கட்டப்படும் ஊஞ்சல் . ஆடிப் பெருக்கு அன்று 
33 வாவூஸ் அசனம்  இதற்கு அர்த்தம் தெரியாது . ஆனால் , மாட்டுப் பொங்கல் நாள் அன்று எல்லாம் முடிந்த பிறகு உணவளித்த எல்லா தெய்வங்களுக்கும் , கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாக பட்டியைச் சுற்றி மூன்று முறை நீரை இருவர் இறைத்துக் கொண்டே வலம் வந்து நன்றி தெரிவித்தல்  

தொடரும் …

வாழ்த்துகளுடன்
செ ச

ஏனுங்க , நீங்க கோயம்புத்தூருங்களா ?

மேலே, உள்ள தலைப்புப்படி யாரேனும் என்னைக் கேட்டால் , சட்டென்று ‘இல்லைங்க , கொஞ்சம் பக்கத்துல ஈரோடு, சரியாச் சொல்லனுமுன்னா வெள்ளகோவில் ‘ என்று சொல்லிவிட்டு அப்புறம் யோசிப்பேன். அட , இந்த மாதிரி மரியாதை கலந்த தமிழில் பேசுபவர்கள் அனைவருக்குமான பொது மதிப்பீடு , இவர்கள் ‘கோவைக்காரராக’ இருக்க வேண்டும் என்று மற்றவர்கள் யூகித்து பொத்தாம்பொதுவாக ‘கொங்குத் தமிழில் ‘ பேசுபவர்களெல்லோருக்கும் ‘கோயம்பத்தூரே’ சொந்த ஊராகிப் போனது. இப்போது விஷயம் , அதுவல்ல . முகநூலில் ஒரு மாதம் முன்பு , அக்காள் ஒருவர் ‘கொங்குத் தமிழ் பேச்சு வழக்கு’ என்று சிற்சில தகவல்கள் அடங்கிய பதிவொன்றை பகிர்ந்திருந்தார். நானும் சிலபல சமயங்கலில் அது பற்றிய பதிவு ஒன்றைப் பகிரலாமே என்று எண்ணிக் கொண்டே வெட்டியாக நாட்களை மட்டும் கடத்திக் கொண்டிருந்தேன் , ஆகையால்  ஆர்வமிகுதியால் ‘ இதை (அந்தப் பதிவை) நீங்க எழுதுனீங்களா ?’ என்று கேட்டு வைக்க , அவங்களோ ‘எங்கத்த , பகிர்வு மட்டும்தான் , வேணும்னா நீ எழுதேன் , அதை(யும்) பகிர்ந்துட்டாப் போச்சு ‘ என்ற அளவில் நம்மை உசுப்பிவிட , நிகழ்வதே இந்தப்பதிவு.

கண்டிப்பாக எழுதி விடுவோம் என்று உக்கார்ந்தவுடன் , நமது கூகிள் ஆண்டவர் துணையோடு யாரெல்லாம் என்னென்ன இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள் என்று பார்த்தால் அப்பப்பா நான் சொல்லவந்ததை 10 வருடங்களுக்கு முன்பே சிலர் எடுத்து கையாண்டு பல பதிவுகள் பகுதி பகுதியாக  இட்டு வந்துள்ளனர் . அனைவருக்கும் முதலில் வணக்கங்களும் , நன்றிகளும் .அவர்களில் முதன்மையாக எனக்குத் தெரிந்த ஒருவர் , வா மணிகண்டன் அவர்கள் . பிற்பாடு , நிறைய பேர் எழுதி இருந்தாலும் சற்றேறக்குறைய அனைத்துப் பதிவுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாதலால் யாருடையது ‘மூலம்’ என்று தெரியவில்லை. அதோடு , 2006-09 ஆண்டுக்குப் பிறகு இதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனது இந்தப்பதிவு அவர்களின் பதிவுகளின் ‘தொடர்ச்சி /நீட்சி’ என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

அத்தோடு , கிடைத்த உபரி தகவல் – ‘கொங்கு வட்டார சொல்லகராதி ‘ பெருமாள் முருகன் அவர்களால் எழுதப்பட்டது என்று.

இந்தப் பதிவை நாள்தோறும் படிப்படியாக பேச்சு வழக்குச் சொற்களை அவை பயன்படுத்தப்படும் பாங்கில் பிரித்து பகுதி பகுதியாக , ஆனால் இதே பதிவில் மேன்படுத்திக்கொள்ளலாம் என்று ஆவல் .

குறிப்பு : அதோடு , யாருக்கேனும் இன்னும் சொற்கள் தெரிந்து இருந்தால் , தயங்காமல் அனுப்பி வைக்கவும் . நன்றிகள்.

1.வீடு  அதன் சுற்றுப்புறம் சார்ந்த சொற்கள் :

 

 

1 இட்டாரி(லி), இட்டேறி வழித்தடம் , சிறிய பாதை , கிளைத்தடம்
2 நடவை கதவு
3 சீமாறு , சீவமாரு, சீவக்கட்டை விளக்குமாறு
4 ஈக்குமாறு விளக்குமாறு , தென்னைமர குச்சியில் செய்தது . வீட்டுக்கு வெளியில் கூட்ட , பெருக்க பயன்படும்
5 தொறப்புக்குச்சி சாவி , திறவுகோல்
6 தொற திற
7 தொரை பெரிய துரை இவரு . அதாவது ஒருவர் செய்யமுடியாத செயலைச் செய்ய எத்தனிக்கும் போது, விளிக்கப் பயன்படும் சொல்.
8 எரவாரம் ஓட்டு வீடுகளில் திண்ணைக்கு மேல் கைக்கைட்டும் இடத்தில் அகப்படும் இடுக்கு, தாள்வாரம்
9 தாவாரம் தாழ்வாரம்
10 நீக்கு கதவ நீக்கு – கதவைத் திற
11 அட்டாலி , அட்டாரி பரண்
12 போசி சிறிய (அ) அளவான பாத்திரங்கள்
13 சால் , அண்டா, சருவம் தண்ணீர் ஊற்றி வைக்கப் பயன்படும் பாத்திரம்
14 ஒலக்கை உலக்கை
15 மூலை ஓரம் , இடுக்கு
16 கண்டரை அடுக்கு
17 சலந்தாரை , சலவாரை , சலந்தாரி தண்ணீர் செல்லும் பாதை
18 வள்ளம் , வல்லம் , படி அளக்கப் பயன்படுவது . சிலசமயங்களில் ‘படி’ – வெண்கலத்தால் ஆனது , எச்சில் துப்பவும் பயன்படும் .
19 நெலவு வாசற்படி கதவு
20 பொடக்காலி வீட்டின் பின்புறம் , குளிக்குமிடம்
21 தேகுசா , தேவுசா பாத்திரம்
22 தயிர் சிலுப்புதல் தயிர் கடைந்து வெண்ணை எடுத்தல்
23 மத்து ஒரு வகைக் கரண்டி , கடைவதற்குப் பயன்படுவது
24 பராத்து மிகப் பெரிய தட்டு
25 வட்டல் சாப்பிடும் தட்டு
26 அன்னவாரி சாதம் அள்ளிப்போட உதவும் கரண்டி , அன்னக்கரண்டி
27 முக்கு முனை , திருப்பம்
28 ஓல்லு நெல் , கம்பு குத்த பயன்படும் ஒருவகையான செக்கு
28 ஓர் ஒளவு ஓர் உழவு (பெய்த மழையைக் குறிக்கும் சொல் )
29 சால்பரி கோழிகளை மூடி வைக்கப் பயன்படுவது , தண்ணீர் இறைக்கவும் பயன்பட்டது
30 நடவை கதவு
31 லாந்தர் , அரிக்கேன் விளக்கு Lantern என்பது மருவி வந்து இருக்கலாம்
32 துப்புட்டு போர்வை
33 தலவாணி தலையணை
34 கால்மாடு கால் வைக்கும் பகுதி
35 களம் வாசல்

2.விவசாயம் சார்ந்த சொற்கள்  :

 

1 மக்கிலி (மக்கிரி ) பெரிய கூடை
2 கலப்பை ஏர்
3 கொலுவு ஏர் முனை , கூரான ஆயுதம்
4 மம்முட்டி , மம்பட்டி மண்வெட்டி
5 கொத்து சிறிய மண்வெட்டி
6 மொளக்குச்சி ஆடு மாடுகளைக்  கட்ட நிலத்தில் அடிக்கும் மரத்துண்டு
7 சாளை இரு வேறு பொருள் – வீட்டுக்கு வெளியில் தனியாக இருக்கும் சிறிய இடம்
8 கட்டுத்தரை மாடு கன்றுகளை கட்டி வைக்கும் தொழுவம்
9 கொடாப்பு பிறந்த மாட்டின் இளங்கன்றுகளை  அடைத்து வைக்கப் பயன்படும் சிறிய ஓலை குடிசை
10 அண்ணாங்கால் மாட்டின் வேகத்தை மட்டுப்படுத்த ஒரு கயிறை கழுத்தில் இருந்து காலோடு சேர்த்தி கட்டி விடுதல்
11 பால் பீய்ச்சுதல் பால் கறத்தல்
12 உருவாஞ்சுருக்கு ஆடு மாடுகளை காட்டும் போதும் இலகுவாக அவிழ்க்கும் படியும் , அதே சமயம் கழண்டு விடாதபடியும் போடப்படும் முடிச்சு
13 அண்ணாங்கயிறு பால் கறக்கும் போது மாட்டின் கால்களைச் சேர்த்துக் கட்டும் கயிறு
14 பட்டி ஆடுகளை அடைத்து வைக்குமிடம்
15 தொண்டுப்பட்டி மாடு , கன்றுகள் இருக்குமிடம்
16 அணைதல் மாலை நேரத்தில் கோழிகள் தூங்கச் செல்லுவதைக் குறித்தல்
17 கிடாரி பெண் மாடு (கன்று ஈனுவதற்கு முன் )
18 நசியம் , பயிராவுதல் மாடுகள் கர்ப்பமாகுதல்
18 காளைக்குத் திரியுது அதே பொருள்தான்
19 கடவு , கடவுப்படல் தட்டி
20 தடுக்கு தென்னை ஓலையில் செய்யப்படும் பாய்
21 பாவை பாய்
22 மசை பிடித்தல் வெறி பிடித்தல்
23 தட்டக்கூடை கொஞ்சம் பெரிய அளவிலான வாய் அகன்ற கூடை
24 செம்பிலியாடு நாட்டு ஆடு
25 வால்கவுறு கவுறு – கயிறு . மஞ்சியினால் திரித்த கயிறு
26 மஞ்சி தென்னை மட்டையில் திரித்தது
27 கவலை(ளை)யோட்டுதல் மின்சாரம் வருவதற்கு முன்பு தண்ணீர் இறைக்கப் பயன்பட்டது
28 சேந்துதல் இறைத்தல்
29  தரம்பு கட்டுதல் கிளுவை நொச்சிக் கட்டைகளை வைத்துக் கட்டப்படும் படல்
30 மாறு பொதுவாக குச்சியைக் குறிக்கும் சொல்
31 பரம்பு ஓட்டுதல் பொதுவாக ஆற்றில் ஊத்து வெட்டி தண்ணீர் எடுப்பவர்கள் , ஆற்றில் நீர் ஓடி ஊற்றை சமன் செய்துவிட்டுப் போனபிறகு மீண்டும் மண்ணைத் தோண்டி ஊற்றாக மாற்றுவர். அந்த செய்கைக்குப் பெயர் ‘பரம்போட்டுதல் ‘
32 மொறம் முறம்
33 கருக்கருவாள் பொதுவாக சிறிய இலை , தழைகளை அறுக்கப் பயன்படுவது
34 கொடுவாள் அரிவாள்
35 களத்துமேடு வீட்டை விட்டு தனியாக இருக்கும் வாசல். பயிர் வகைகளை பிரித்தெடுக்கப் பயன்படுவது. சேமிப்புக்கும் உதவும்.
36 பாம்பேரி கிணறு வெட்டியதில் இருந்து வெளிவந்த மண் அருகிலேயே ஏரி போல குவித்து வைக்கப்பட்டு மேடாக மாறி இருக்கும்
37 நப்பு வற்றிக்கிடந்த கிணறு , நீரோட்டம் பெற்று ஊற ஆரம்பித்தால் , அருகில் ஏதாவது நீரோட்டம் ,நீர்த்தேக்கம் இருப்பின் அந்த நப்பு (தாக்கம்?) இங்க அடிச்சுடுச்சு என்பார்கள்
38 ஆத்துப் பாசனம் , கிணத்துப் பாசனம் முறையே விவசாயத்துக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைக் குறிக்கும்
39 இடால் , கண்ணி இரண்டும் மிருகங்களைப் பிடிக்க வைக்கப்படும் பொறி .
40 பெருக்கான் பெருச்சாளி
41 ஓடைக்காய் ஓணான்
42 நஞ்சு பெரும்பாலும் விஷம் என்ற பொருள்தான் . ஆனால் , ஆடு மாடுகள் குட்டி /கன்று ஈன்ற பிறகு வெளிவரும் தொப்புள் கொடியைக் குறிக்கும்
43 பாத்தி கட்டுதல் மண்ணை நடவு நாடா , தண்ணீர் பாய சீராக்குதல்
44 முருங்க்கா பொறிக்கிறாங்க முருங்கை பறித்தல்
45 தண்ணி வெட்டி உடுறாங்க வயல்களுக்கு , நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல்
46 வெள்ளாம, பண்ணாமை வெள்ளாமை – விவசாயம்
47 முட்டுவழி , முதல் ஒரு பயிர் விளைவிக்க ஆகும் மொத்த செலவு
48 மேட்டாங்காடு வானம் பார்த்த பூமி
49 தாளி ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்க உதவும்
50 போர் போடுதல் விளைந்த கொடி , தட்டுகள் , இலை தழைகள் அனைத்தையும் சேமித்து வைக்கப் போடும் அரண்
51 தோட்டத்துல இருக்காங்க பொதுவாக ஊருக்குள் குடியிருக்காமல் விவசாயம் செய்யும் நிலத்திலேயே வீடு கட்டி வாழ்வோரைக் குறிப்பது
52 கந்தாயம் , போக்கியம் , கிரயம் நிலத்தை விற்றல் /வாடகைக்கு விடுதல் ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள்
53 பண்ணை நீர் சேமித்து வைக்கும் தொட்டி
54 பண்ணையம் விவசாயம்
55 ரீப்பர் வீடு கட்டப் பயன்படும் ஒரு வகைக் கட்டை/தப்பை
56 கடைமடை , கடக்கோடு இறுதி/கடைசி
57 சும்மாடு தலைப்பாகை
58 சுழி மாட்டுக் கன்றுகளுக்கு தலையில் இருக்கும் முடி
59 குறுக்குச்சால் பொதுவாக எந்தச் செயலையும் நன்றாக நடக்க விடாமல் கெடுத்து விடுவது .
60 கவண் குருவிகளை விரட்டப் பயன்படுவது . கயிற்றில் செய்யப்பட்ட நடுவில் ஒரு கல் வைத்து வீசுமளவுக்கு அகலம் உள்ளவாறு அமைக்கப்பட்டது
61 பாங்கிணறு தூர்வாரப் படாமல் தூர்ந்து போய்க் கிடைக்கும் பழைய கிணறு .
62 ஒடுக்கு பனையோலையை வைத்து சாப்பிட பின்னப்படும் . ஒடுக்கஞ்சோறு என்று ஒரு பதமும் உண்டு  .
63 கூமாச்சி கூர்மையான பகுதி
64 பாட்டாளி உழைப்பாளி
65 தொக்கடா குறுக்குவழி
66 வெள்ளத்தாரை நீர் போகும் பாதை
67 கிட்டி வேலி தாண்டிப் போகும் ஆடுகளுக்கு கழுத்தில் கட்டி விடப்படும் ஒரு தப்பட்டை

எப்பா சாமி , மிச்சம் அடுத்த பதிவில் .

 

வாழ்த்துகளோடு ,

செ . ச

நான் பார்த்த இரண்டு படங்கள்

அனைவருக்கும் வணக்கம் . ‘தாரை தப்பட்டை’யெல்லாம் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு இனிய குளிர் விடுமுறை வார வருடக்கடைசியில் நான் பார்த்த இரு படங்களைப் பற்றி எழுதியே ஆக வேண்டுமென்று தினமும் வெட்டியாக 4 மணி நேரம் போக்கிக் கொண்டிருக்கும் கீச்சுலகத்தையும் , முகப்புத்தகத்தையும் ஏறக்கட்டி விட்டு எழுதலாம் என்று உக்கார்ந்து விட்டேன்.

முதலாவதாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் ‘பசங்க -2 ‘ படம். இங்கே , தமிழ்ப்படங்கள் பார்க்க  சாதாரணமாக 40-50 மைல்கள் கடந்துதான் போக வேண்டி இருக்கும். அதனால் பெரும்பாலான படங்கள் பார்க்க முடிவதில்லை. ஆனால் , இந்தப் படத்துக்கு விருப்பம், சரியான கூட்டு , நேரம் அமையப் பெற்றதால் பார்க்க முடிந்தது. படம் – தரம் .

நமது கல்விமுறையையும் , குழந்தை வளர்ப்பையும் , நகரவாழ் மாந்தர்களின் செக்குமாடு போன்ற வாழ்க்கையையும், மருத்துவர்களின்/கல்விக்கூடங்களின் பணப்பிடுங்கல்களையும்  அருமையாக படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல படம் பல விசயங்களைச் சுட்டி இருந்தாலும் , மிக முக்கியமாக கல்வி , இயல்புக்கு மாறாக துறுதுறுவென இருக்கும் இரண்டு குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும்  சுற்றியே பின்னப்பட்ட கதை. அந்தக் குழந்தைகளினால் அவர்களின் பெற்றோர்  படும் பாடு , மற்ற குழந்தைகளைப் போலவே தங்கள் குழந்தைகளும் இருக்க வேண்டும் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளின் இயல்பைப் புரிந்து கொள்ளாமல் அவர்களை வற்புறுத்தும் பெற்றோராக முனிஸ்காந்த் ராமதாஸ்-வித்யா மற்றும் ரவிக்குமார்-பிந்து  மாதவி தம்பதியர் ஆகியோரைச் சுற்றியே இடைவேளைவரை கதை பின்னப்பட்டு இருக்கும். அவர்களின் பிள்ளைகளாக நிஷேஷ் மற்றும் பேபி வைஷ்ணவி. சும்மா சொல்லக்கூடாது , பின்னி எடுத்து இருக்கிறார்கள்.

பள்ளிக்கூடம் , பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டு இறுதியாக விடுதியில் தள்ளப்படும் குழந்தைகளின் திறமையை, எவ்வாறு அவர்களின் பெற்றோரிடம்தான் தவறு என்று உணரவைத்து மாற்றும் கதாப்பாத்திரத்தில் சூரியா (மருத்துவர் தமிழ் நாடன்) மற்றும் அமலாப் பால் தம்பதியர். கொஞ்சம் செயற்கைத்தனம் தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே இவர்களின் கதாபாத்திர அமைப்பு. படத்தின் ஆரம்பக் காட்சி சொல்லுவது – முழுப் படத்திற்குமே பொருந்தும். அதாவது , போட்டியில் எல்லோரும் ஜெயித்து விட முடியாது, ஆனால் , அவர் அவர்கள் வைத்த இலக்கை போராடி அடைபவர்கள் ஒவ்வொருவரும் வெற்றியாளர்களே.

படத்தில் கவனிக்க வேண்டிய மற்ற முக்கியமான அம்சங்கள் – 1. நடிக நடிகையர் தேர்வு. 2. பாலசுப்ரமணியம் அவர்களின் ஒளிப்பதிவு – தரம் , காட்சிகள் அத்தனையும் கண்களுக்கு விருந்து . 3. இசைஅமைப்பாளர் அரோல் கரோலியின் இசை – சிறுவர்களுக்கான பாடல்கள்தான் என்றாலும் அதைக் காட்சிப்படுத்தியவிதம்  மற்றும் இசை மூலம் குழந்தைகளுக்கு பிடிக்கும்படி அமைந்துவிட்டது வெற்றி. ‘தம் தம் தார’ என்று தொடங்கும் படத்தின் மையப்பாடல் அருமை. மற்றபடி பின்னணி இசை , பாடல்கள் படத்தோடு ஒன்றி வருகிறது.

படம் – கண்டிப்பா புதிதாக குழந்தை பெற்றுக்கொள்வோரும் , குழந்தையைப் பெற்ற பெற்றோர் அனைவரும் பார்க்க வேண்டிய படம். ஆனால் , படம் வேண்டிய அழுத்தத்தை தரவில்லை என்றே தோன்றுகிறது. கண்டிப்பாகப் பாருங்கள்.

 

இரண்டாவதாக லியனார்டோ டி காபிரியோ நடித்த ‘தி ரெவனண்ட்’ திரைப்படம் . நம்மூரில் ஹாலிவுட் பாணியைப் பற்றி படங்களை முடிந்த அளவு இரண்டு-இரண்டேகால் மணியில் முடித்து விடுகிறார்கள். ஆனால் , இங்கோ நம்ம பாணியில் இப்போதெல்லாம் இரண்டரை மணிக்குக் குறைந்து படங்ககெல்லாம் வருவதே அரிது . இப்படம் 2 மணி 36 நிமிடம் . இயக்கியவர் – அல்ஜெண்டரோ கோன்சலே இன்அரிட்டு. கதை என்னமோ – ஆதிகாலத்து (சின்ன மாற்றம்) பிள்ளையைக் கொன்றவனை பழிவாங்கும் அப்பனின் சாதாரண கதைதான். ஆனால் , அதை எடுத்த விதமும், ஆஸ்காருக்கு அடி மேல் அடி போடும் டி காபிரியோவின் நடிப்பும் அப்பப்பா அருமை. டாம்  ஹார்டி வில்லனாக.

 

படம் கவ்பாய் காலத்தே , வண்டிகள் வந்திராத துப்பாக்கி ஏந்திய முன்நூற்றாண்டுகளின் காலகட்டத்தில்(1823) நடக்கிறது. சிவகாசி விஜயன் சார் புண்ணியத்தில் டெக்ஸ் வில்லரையும் , டைகரையும் , லக்கி லுக்கையும்  படித்த என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களுக்கு செவிந்தியர்களையும் அவர்கள் மண்டைத் தோலை உரிக்கும் பாங்கையும் , எந்தவொரு வெள்ளையனையும் நம்பாத பாங்கையும் நன்கு தெரியும். அதுவே இப்படத்தில் நன்கு சொல்லப்பட்டு உள்ளது. குழுவாக அமெரிக்கர்கள் pelts என்றழைக்கப்படும் விலங்குகளின் தோலை சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் இடத்தில் செவ்விந்தியர்களால் தாக்கப்பட்டு , தப்பித் திரும்ப தங்கள் கோட்டைக்கு வரும் வழியில் கரடியால் காயம்பட்டு மரணத்தருவாயில் இருந்து மீண்டு வந்து – மீண்டு வரும் அத்துணை காட்சிகளும் எதார்த்தம் மிளுரும், தன் மகனைக் கொன்ற டாம்  ஹார்டியைக் கொல்லும் கதாப்பாத்திரத்தில் டி காபிரியோ வாழ்ந்து இருக்கிறார். அற்புதமான நடிப்பு , சில இடங்களில் மிகை. படத்தில் மிக முக்கியமான அம்சம் – கதை நடக்கும் இடங்கள் – காடுகள் , மிருகங்கள், பனி படர்ந்த மலைப்பிரதேசங்கள் என அத்துணையும் அமர்க்களம்.  படத்தில் ரத்தசகதி மிக அதிகம் . எனினும் , படத்தின் காலகட்டமும் அது செல்லும் பாதையும் அவை தேவையானவை என்றே உணர்த்தும். படத்தின் இறுதிக்காட்சி பார்த்தவர்கள் கண்டிப்பாக இளையராஜாவை நினைவு கூறுவார்கள்.

படத்தின் மைனஸ் என்றால் – நீளமும் (சில சமயங்களில் ஆயாசம் ஏற்படும், தவிர்க்க முடியாது), ஊகிக்கக்கூடிய திரைக்கதையும்தான்.

பி.கு: ‘Revanant’ – என்ற ஆங்கிலப் பதத்துக்கு சாவின் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவன் என்று பொருள்.

வாழ்த்துக்களுடன் 

செ.ச

அதிதி தேவோ பவ

இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சாப்பாடு என்றால் முதலில் பெற்ற தாய்தான். நான் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. வீட்டை விட்டு , நாட்டை விட்டு திரவியம் தேடியோ அல்லது என்னைபோல வருவதை ஏற்றுக்கொண்டு வந்தேறிய இடத்தில் நன்றாக சமைக்கும்போதும், ஏனையோர் பாராட்டும்போதும், ‘அம்மா’ சமையல் பக்குவம் அப்படியே என ‘கழுத்துப்பட்டிகியை’த் தூக்கி விட்டுக் கொண்டு சிலாகிக்கும் ஏதோ ஒரு தருணத்தில் இதுவரை எனக்கு அன்னமிட்டவர்களைப் பற்றிய எண்ணம் எழுந்தது தவிர்க்க இயலாது. ‘அம்மா’ சமையலைத் தவிர என் இரண்டு பெரியம்மாக்களின் சமையலும் மிகவும் பிடிக்கும். அதுவும்,பக்கத்துக்கு வீட்டுப் பெரியம்மா சாம்பார் வைத்தால் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரியும் நான் அங்குதான் இருப்பேன் என்றும். ஏழு கழுதை வயசானாலும் அவங்க வீட்டுல சாப்பிடுவதை நிறுத்தவில்லை. அதை நிறுத்த எங்கம்மா செய்த எந்த பகீரதப் பிரயத்தமும்  உதவவில்லை. ஒரு டம்ளர்ல  பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போய் சாம்பர வாங்கிட்டு வந்து ஒழிச்சு வச்சு எங்க வீட்டு சாப்பாடோட சாப்பிடுற சுகமே தனிதான். வேணுமின்னா நீங்களும் செஞ்சு பாருங்களேன்.

அதுபோக,ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை மாலை பள்ளி முடிந்ததும் , அப்பா கடையிலிருந்து வீடு போகும்வரை இடைப்பட்ட நேரம் (ட்யுசன் நேரம் போக) நான் இருந்தது , கடைக்குப் பக்கத்திலுள்ள ராசா அம்மா வீட்டில் (அவங்க உண்மையான பேரு கூட மறந்துவிட்டது). வாரத்துல முக்கால் வாசி நாளு,அங்கதான் நமக்கு இரவுச்  சாப்பாடு , அந்த இட்லிக்கும் காரச்சட்டினிக்கும் என்ன குடுத்தாலும் தகும். கணவனை இழந்து, கடைகளுக்கு வீட்டிலிருந்தபடியே ‘வடை’  சுட்டுக் கொடுப்பதுதான் அவர்கள்  சம்பாத்தியம். ஆனாலும், விடுமுறை தினங்களில் அந்த வடைகளுக்கு முதல் எதிரி என் ‘வாய் ‘தான் . காசு இல்லாம ரெண்டு , காசு கொடுத்து(அவங்க வேணாமுன்னு சொன்னாலும்) ரெண்டு. மகள் வயிற்று பேரனையும் , பேத்தியையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் இவர்களிடம் இருந்தது. அவர்கள்தான் எனக்கு மீதநேரம் பொழுதுபோக்கு. பின்னாளில்,அவர்கள் மகளுடன் சென்று ‘திருப்பூரிலியே’ தங்கிவிட்டார்கள்.

நானும் மேல்படிப்புக்காக கோயம்புத்தூருக்கு வந்த பிறகு,அங்கு விடுதி சாப்பாடு தான். அதுவும், செவ்வாய்க் கிழமை அன்றைக்கு வழங்கப்படும் பருப்பு சாதமும் , நெய்யும்,அப்பளமும் தேவாமிர்தம் என்பதை ஸ்ரீராமகிருஷ்ண மிஷனில் படித்த, படிக்கும், படிக்கப்போகும் எவனும் மறக்கமாட்டார்கள் . இதில், எவளும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால், நீங்களே விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு, ஞாயிறுதோறும் மதியம் வரும் பாயாசம் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும். இருக்கும்போது எதனுடைய அருமையும் தெரியாது என்பதைப் போல, மூன்றாவது வருடம் விடுதியில் இல்லாமல் வெளியில் அறை எடுத்துத் தங்கியிருக்கும்போது தான் விடுதி சாப்பாட்டின் அருமை தெரிந்தது. முதலில், அங்கேயும் இங்கேயும் சாப்பிட்டு உடம்பைக் கேடுக்கொண்டதுதான் மிச்சம் . அதன்பிறகு , நண்பன் ஒருவன் பழக்கத்தால் வீட்டில் சமைத்துப் போடும் ஒரு அக்காவின் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தோம். என்ன இருந்தாலும், உணவகங்களில் சாப்பிடுவதற்கும் இப்படி வீட்டில் சமைத்து தானும் அதையே சாப்பிட்டு அதை ஒரு வியாபாரம் போல எண்ணாமல் மற்றவர்களுக்கும் சமைத்துப் போடும் இது போன்ற இடங்களில் ஒருவிதமான தனித்துவமான பிடிப்பு வந்துவிடும். இவர்களையெல்லாம் காலம் உள்ளமைக்கும் மறக்க இயலாது.

அடுத்து, மேற்படிப்புக்காக சேலத்தில், முதலில் இருந்தே வெளியில் அறை எடுத்து தங்கும்படியானது. படிப்புச்சுமையால் மற்றும் வெளியில் சாப்பிட்டதனால் வயிற்றில் குடல் அழற்சி வந்து படாதபாடுபட ஆரம்பித்த வேலையில், நல்லவேளையாக அங்கும் சாப்பிடுவதற்கு ஒரு ஏற்ற இடம் அமைந்தது.  ஐயர் ஒருவர் , தனது வீட்டிலேயே முன்னறையில் மாணவர்களுக்கென ஒரு மெஸ் வைத்திருந்தார். வெளியில் பிரபலமாக ‘மாமி’ மெஸ் என்று அறியப்பட்ட இடம். இங்க சாப்பிடத் துவங்கிய பின்பு தான் குடல் புண்ணெல்லாம் பொய் என் உடல் எடை கூடியது எனலாம் . சாப்பாடு அவ்வளவு பிரமாதமாக இருக்கும். விலை கொஞ்சம் கூட இருந்தாலும், எந்த நேரத்தில் போனாலும் முகம் சுளிக்காமல் சாப்பாடு கிடைத்த இடம் அதுதான். சத்தியமாக, இவங்க இல்லையென்றால் என்பாடு திண்டாட்டம் ஆகி இருக்கும்.

அடுத்து , வேலை கிடைத்து பெங்களூரு வந்த பிறகு அங்கேயும் நண்பர்களுடன் தனிஅறை எடுத்து , சமையலுக்கும் ஒரு அம்மாவை வேலைக்கு வைத்துக்கொண்டோம். மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்கித் தந்து விடுவது, மாதம் ஆளுக்கு இவ்வளவு என்று கொடுத்து விடுவது. அந்த அம்மாள் பெயர் நாகம்மாள். அறை நண்பர்கள் மாறினார்கள் , நாங்கள் அறை மாறினோம். ஆனால், அந்த அம்மா சமையல் மட்டும் மாறவே இல்லை. காரணம், சமையல் மட்டுமல்ல, கை சுத்தம், அன்பு , இதனைத் தொழிலாக நினைக்காமல் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே ஆகிவிட்டார். நான்கு வருடங்கள், சாப்பாடுக்குப் பஞ்சமில்லை. நான் இங்கு, அமெரிக்கா கிளம்புபோது அழுதே விட்டார். இவர்களுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்வேன் என்று தெரியாது. அதனால்தான், இந்தப் பதிவு.

இனிமே, மிகமுக்கியமாக ஒரே ஒருவரின் சமையல்தான் பாக்கி, ருசி பார்க்க. ஆனா , நல்ல இருந்தாலும், இல்லைனாலும் எதுவுமே பேச முடியாது. ;).ஒரே ஒரு வழி, நானே சமைத்துக்கொள்ள வேண்டியதுதான் (அவளுக்கும் சேர்த்து).

நான் பார்த்தவரை இந்த சமையல்வேலை  செய்பவர்கள் அனைவரும் கணவனை இழந்தவர்கள் அல்லது வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நிலையில் கஷ்டப்பட்டு இருந்தவர்களாகவே இருக்ககண்டேன். அவர்களுக்குத்தான் இதன் அருமையெல்லாம் தெரியுமோ என்னவோ.

நன்றியுடன் ,

செ .ச 

நனவோடை – A review of 3D Animated Film ‘Inside Out’

‘ஒரு முருங்கைக்காய் 25 ரூபாயாம், அப்போ 50 காய்க்கு, 50*20=1000 + 50*5=250 =1250 கிடைக்கும் என்று எண்ணியவாறே நான் உக்கார்ந்து இருக்கிறேன் . இடம் – பழகிய முருங்கைக்காய் மண்டி. ஆனால் அவரோ , கமிசன் போக 995 ரூபாய் என்று கொடுக்கிறார். இதில் பல நினைவுகள் , எண்ண ஓட்டங்கள் ,

1. எப்பொழுதும் ஒரு முழுத்தொகையைப் பார்த்தால் மட்டுமே கொஞ்சம் ஆறுதல் அடையும் எனது மனம் – 1000ரூ கிடைத்து இருக்கலாமோ என்று எண்ணிக்கொண்டு இருந்தது .

2. இவ்ளோ கமிஷனா , முன்னெல்லாம் ரொம்பக் கம்மி . அதே சமயம், விளையும் கம்மிதான் , 1 கிலோ = ரூபாய் 6, மிஞ்சிப்போன  15 அவ்ளோ தான் .

3. நான் சொன்னா அப்பா கேக்கறதில்லை. அப்பப்போ சந்தையில கொண்டாந்து போடுறதுக்கு பதிலா நேரம் கிடைக்கிறப்போ மண்டியிலே கிலோக்கணக்கில் போட்டுட்டு வந்துடுறாங்க .

4. அப்பாவின் உடல் நலம் ‘-.  காலையிலே நல்ல கனவு. இன்னும் கொஞ்சம் ஏதேதோ வந்தது . அதெல்லாம் சொல்ல சதீஸ்-ன் தணிக்கை அனுமதிக்காது .😜

சரிங்க. சொல்ல வந்த விசயமே வேற. இந்தக்கனவுகள் எப்படி ஏற்படுகிறது என்று நேற்று(முந்தைய தினம் ) பார்த்த ‘Inside Out ‘ (தமிழ்ப் படுத்தினால் – நனவோடை. பெயர்ப்பதம்- நன்றி :என். சொக்கன்)என்ற உலகப்புகழ் பெற்ற வால்ட் டிஸ்னியின் முப்பரிணாம திரைப்படம் சொன்ன விஷயங்கள்தான். உலகம் முழுதும், பீட் டாக்டரால் இயக்கப்பட்டு வால்ட் டிஸ்னி மற்றும் பிச்சார் அனிமேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜூன் 19, 2015 அன்று வெளிவந்து நல்ல படம் என்று விமர்சகர்களால் பாராட்டுக்களை  பெற்றுக்கொண்டிருக்கும் படம்.

tumblr_nkng9qDkUH1rezh6to1_1280

படத்தின் கரு – ரைலி ஆண்டெர்சன் என்ற சிறுபெண்ணின் (அந்த சிறு பெண்ணை மட்டுமல்ல) மனதை ஆட்கொண்டிருக்கும் மகிழ்ச்சி , கோபம் ,வெறுப்பு ,பயம் மற்றும் துக்கம் ஆகிய ஐந்தையும் கதைமாந்தர்களாய்  வைத்து, அவர்கள் எவ்வாறு தன் சொந்த ஊரில் (மினிசோடா) இருந்து சான் பிரான்சிஸ்கோ வரும் ரிலேவை ஆட்கொள்கிறார்கள் என்று நகைச்சுவை , உண்மை கலந்து சொல்லி இருகிறார்கள் என்பதே இதன் வெற்றி.

joyio_Sadness_standardfeario_Anger_standardio_Disgust_standard

இதில் மகிழ்ச்சி மட்டுமே சிறுவயதிலிருந்தே ரைலியை ஆட்கொண்டு அவளை மகிழ்வாய் வைத்திருக்கிறது. அனால், அவள் தனது பதினோறாவது வயதில் தந்தையின் இடமாற்றம் காரணமாக சான் பிரான்சிஸ்கோ வரும்போது மகிழ்ச்சியைத் தவிர ஏனைய நான்கு பேரும் ஆட்கொள்கிறார்கள், என்பதில் படம் தொடங்குகிறது.  இந்த ஐவரும் மூளையைத் தலைநகரமாகக்கொண்டு இயங்குகிறார்கள்.

பழகிய இடத்தைவிட்டு புது இடத்துக்கு , புது பள்ளிக்கு வரும்போது துக்கம் மேலோங்குகிறது. எனினும் மகிழ்ச்சி ரைலியை சந்தோசப்படுத்தும் வேலையைச் செய்யும் போது ,core memories  எனப்படும் முக்கிய நினைவுகளை துக்கம் எதேச்சையாகக் கலைத்து விடுகிறது. அதனைக் கண்டுபிடித்து மீட்டெடுக்கும் முயற்சியில் மகிழ்ச்சியும் துக்கமும் தலைநகரத்தில் இருந்து பிரிந்து நினைவுகளின் களஞ்சியத்தில் போய்ச் சேர்ந்து திரும்பி வர படாதபாடுபடுகிறார்கள்.

இதற்கு இடையில் , தானைத்தலைவி ஜாய் (மகிழ்ச்சி) இல்லாததால் பயம்,கோபம், வெறுப்பு ஆகிய மூன்றும் என்ன செய்வதெனத் தெரியாமல் நடத்தும் ஆட்டத்தால்,ரைலியின் முக்கியமான உணர்வுகளான  நட்பு,குடும்பம்,விளையாட்டு, நேர்மை மற்றும் அப்பாவித்தனம் எல்லாம் கோளங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனித் தீவுகளாக தலைநகரத்துடன் இணைந்து செயல்பட்டு வருவது ஒவ்வொன்றாகத் தகர்கிறது.

islands

படங்கள் – கோளங்கள் . நன்றி : Walt Disney Official Page of ‘Inside Out’

அனால், இங்கோ ‘train of thought’ – மன ஓட்டத்தை புகைவண்டியாக  வைத்து , வழக்கற்றுப் போன பழைய நினைவுகளின் கூடாரத்திலிருந்து ஜோயும்(மகிழ்ச்சியும்) , துக்கமும் , ரைலியின் சின்ன வயசு நண்பனான ‘கற்பனைத்திறன் ‘ பிங்-பாங்குடன் (பெயருக்கு ஏற்றமாதிரி ஆளும் பிங்க்கலர் தான்) சேர்ந்து எப்படி கனவுகளைக் உண்டாக்கும் ஆட்களை (நம் மனதின் நியூரான்கள்) மீறி (இங்குதான் முதல் பத்தியில் கனவுகள் பற்றி நான் எழுதியது கருத்தில் கொள்ள வேண்டியது – முழுதாக அறிந்து கொள்ள படத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள் ) ரைலியைத் துயில் எழுப்பி துக்கத்தின் , அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள் துக்கம் – அதுவும் தேவை,மகிழ்ச்சியான வாழ்வுக்கு.ஆனால் அதற்கு உதவ சரியான மனிதர்களின் ஆதரவும் ,அரவணைப்பும் தேவை .

inside-outInside-Out-67

எப்பேர்ப்பட்ட மனஅழுத்தம் வந்தாலும், துக்கமும் மகிச்சியும்  வாழ்வில் சரிவிகதமான அளவில் இருந்தால் , அதிலிருந்து மீண்டு வந்து புதியதோர் ‘மன சாம்ராஜ்யத்தை’ உருவாக்கலாம். அதே சமயம் , எல்லா உணர்வுகளையும் அடக்கி ஆளத்தெரிந்து இருத்தல் நலம் . அவ்வளவே .

இது  குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் , மனதில் குழந்தைகளாக இருக்கும்/நடிக்கும்  நம் அனைவருக்கும் ஏற்றதொரு படம்.

 

வாழ்த்துக்களுடன்

செ.ச

 

A R Rahman @Microsoft Theatre Los Angeles- NA Intimate Concert Tour

Being Raaja Sir fan vying for Ilayaraja concert at Texas, something unofficial this Spring, when A R Rahman announced ‘NA Intimate Concert Tour -2015’ , even though he does concerts here at regular intervals , it was bit of excitement for me, as it would be my ‘first’ concert outside home, after ARR’s ‘Thaai Manne Vanakkam'(2013) @Chennai and Isaignani’s “Sangeetha Thiru Naal”(2014) @Madurai.  After series of ‘Yes’ and ‘No’ s from friends and peers, finally decided to go alone when the venue was not that far from home. Thanks to them, I got my seating reserved for far lesser amount, close to the performance stage.WP_20150610_001 WP_20150610_002 WP_20150610_19_06_14_Pro WP_20150610_19_12_42_Pro WP_20150610_19_27_31_Pro

The date is 10th June, 2015 and venue – Microsoft Theatre aka Nokia Theatre(till Jun 9, 2015) Downtown Los Angeles with 7,100 occupancy.

WP_20150610_23_00_18_Pro

Forgive me , if it will be a spoiler for those who are yet to attend (or planning) in other geographies of NA and UK as the show will be precisely 150 mins and the selection of songs played will also be same from the tour starter on May 22. Source – couple of inputs from friends in New Jersey, latest from Redmond and other new posts.

Ok. Time to move to the event day. Mostly filled with South Indians baring a gist of music people from North and NA, the 7,100 seater MS Theatre filled 90% . Courtesy- last min box office offers and week long price reductions. Blame- Wednesday being a weekday for that too.

WP_20150610_001 WP_20150610_21_02_44_Pro WP_20150610_20_35_35_Pro WP_20150610_20_28_35_Pro

The event started by 8:15pm sharp and ended by 10:45pm, well organised.  The stadium sound experience, smoke effect and lighting was amazing and it echoed when ARR entered with trademark authentic white costume initially and started with a number from Delhi-6: Maula Maula (Arziyaan) , a sufi devotional .

The tempo switched back when we heard the prelude from evergreen  ‘Chinna Chinna aasai/Choti se Aasa’ which brought the name and fame for ‘IsaiPuyal’ . P.S – All the songs which has both Tamil and Hindi renditions are a mix of both versions. The third, ‘Duhi Re’ from Bombay which succeeded the melody light music temper and ended on a high note.  Next. a popular number which I heard most number of times , ‘Dil se re’  – mesmerizzz’d.

No 5 – the ever classical , loved ‘Munbe Vaa Anbe Vaa’ brought the audience to a mesmerized state, followed by  foot-tapping ‘Pachai Nirame /Hansti rahe tu hansti rahe’ which I enjoyed the most.

Then came , the recent classical hit ‘Naan Varugen’ from ‘Ok Kanmani’ and melody ‘Pookale Sattru’ from mega-budget ‘I’. Both songs were rendered without any blemish.

9- If I Rise from 127 hours, not much impressed with this. Then came, Rahman rocking with ‘Rockstar’s – O nadaan parindey ghar aaja
O nadaan parindey ghar aaja’ .

When ARR just hinted a chord with his accordian himself, the crowd went ga-ga and started humming ‘Nenjukkule’ and the enthusiasm continued till the song blew away the crowd.

WP_20150610_21_19_08_Pro

12th was a jazz number from ‘100 feet journey’ rendered by Annetta.

‘o humdum suniyo re’ – ‘Endrendummm Punnagai’ was well-received by the crowd with full energy.

From nowhere  the instrumental version of ‘Kaadhal Rojaave’ came and made everyone spellbound followed by another instrumental(which I couldn’t recollect precisely)

Next – ‘Dum Dara Dum Dara Mast Mast Dara’ from Guru and ‘Ishq bina…kya jeena Yaaro’  from ‘Taal’.

ARR was then trying a new technology  with the song ‘Thee Thee Thithikkum Thee’ developed by Intel called ‘Real Sense Technology’ to play music and appealed it as a ‘good work out’ for him , sensualizing why not musician love gadgets.

Get more about this technology here – Intel RealSense Technology.

Quite profoundly, only Rahman wanted to sing along with him for famous number ‘Mahee Vaa’, but the crowd gave him more by flashing the flashlights from their gadgets. you can flash from every nook and corner of the stadium.

WP_20150610_21_58_25_Pro

No-20:  ‘Jiya Jale / Nenjinile ‘ was rendered by a special singer absolutely followed by another hindi number.

‘Maiyaa , Maiyaa’ from Guru made everyone dance.

23- from an ‘unique voice’ as entitled by ARR himself – Singer Sriram enacted ‘Ennodu Nee Irunthaal’ to the core perfection.

24 – Only Punjaabi song ‘Patakha kudi’ from Highway had everyone on their feets.

Quarter Century – the final one came as a surprise after ARR intimated that the concert was over and flung a finishing touch(we thought so) with ‘Maa Tuje Salaam’ and ofcourse ‘Jai Ho’.

Finally , ‘Mozart of Madras’ asked everyone to switch to party mood and with all singers and performers on stage with part-mix starting ‘Chaiya chaiya’ followed by ‘Mental Manadhil’ and ended with other two small songs. Everyone was abruptly near to the stage and security had hard-time in controlling the crowd.

There were only four major singers alongside Rahman in which Jonita Gandhi and Haricharan shared most of the honours. The other singers were Sriram(had more female fans) and Anneta Phillip.

WP_20150610_22_50_05_Pro

Rahman was live all through the show with full throttle energy , replied to audience ‘I love you, too'(no need to tell what was preceded by) , changed costumes according to mood and nature of the songs , thrice , dancing , singing and was even gently tapping hi-fives with audience close-by stage, true to name of the concert.

WP_20150610_21_41_44_Pro

WP_20150610_22_50_34_Pro WP_20150610_22_50_37_Pro WP_20150610_21_45_52_Pro WP_20150610_21_45_30_Pro WP_20150610_21_45_16_Pro WP_20150610_21_45_19_Pro WP_20150610_21_41_44_Pro WP_20150610_21_41_48_Pro

Love ❤,

Sathish Kumar Sellamuthu 😃 Continue reading

நான்(உம்) அமெரிக்கா போறேன் (வந்துட்டேன்)

ஆமா அமெரிக்கா வந்தாச்சு. மாதம் ஒன்று , ரெண்டானது . பதிவு போட்டு மாதம் மூன்றானது . இப்படியே போனா அடுத்த வருஷந்தான் இன்னுமொரு பதிவு போடமுடியுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதான் என்ன ஆனாலும் சரியென்று ஒரு ஞாயிறு காலையில இந்தியன் பர்மியர் (பிசினஸ்) லீக் ஒரு பக்கமும் , நம்ம வலைப்பூவும் ஒரு பக்கமுமா உக்கார்ந்தாச்சு . அதே போல , எதைப் பத்தி எழுதறதுன்னு ஒரு தயக்கமும் இல்லை. ஏன்னா, அமெரிக்கா வந்ததைப் பத்தி எதுவும் எழுதலையா ,எழுதலையா என்று பற்பல விசாரிப்புகள் (நம்பாட்டி போங்க 😛 ). அதனாலே அதைப் பத்தியே எழுதிடலாமுன்னு முடிவு பண்ணி நாள் போச்சே தவிர , இப்போ தான் வேளை வந்துருக்கு.

ஆபிசில் வணிக நுழைவுச்சீட்டு(அதான் விசா ) வந்தவுடன் எப்போ போவோம்கிற கிளர்ச்சிய விட எங்க போறோம் , என்ன பண்ணப்போறோம் , எவ்ளோ நாளைக்கு ஒருமுறை வரப்போறோம் , வீடு , சொந்தம் , நண்பர்களை விட்டுப் போறோம் , ஊர்க்காரங்க விசாரிப்புகள் என எத்தனையோ விஷயங்கள் தலைய சுத்தி தேனீ போல ரீங்காரமிட்டாலும் மனசு ஒரு ‘ஜென்’ நிலையிலே இருக்க ஆரம்பித்தது எனக்கே ஆச்சரியம் . இதுல தொழில்த்திட்டம் (ப்ராஜெக்ட்) வேற இல்லாம ஒரு மூணு மாசம் ஜாலியாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் .

எல்லாமே இருக்க்கு ஆனா இல்லை என்கிற அளவிலேயே இருந்தது. ஜனவரி வந்தாலும் வந்துது நான் நீன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு வழியாக கலிபோர்னியா போறோம்ன்னு முடிவாச்சு. அப்புறமென்ன என்ன கொண்டு போறது , அங்க தட்பவெப்ப நிலை எப்படி , நம்ம பசங்க யாராவது இருக்காங்களா என்று நானும் , சொந்தக்காரங்க யாராவது இருக்காங்களா என்று வீட்டுலயும் துழாவ, நானும் ஊருக்குப்போய் சொல்ல வேண்டியவங்களுக்கெல்லாம் சொல்லிட்டு வந்து ஆக வேண்டிய வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிக்க அது விமானம் ஏறும்வரை அனுமார்வால் மாதிரி நீண்டுகொண்டே போய்க்கொண்டு இருந்தது..நல்ல வேலையா , தட்ப வெப்ப நிலை பெங்களூருவை ஒத்து இருந்ததாலே தப்பிச்சேன்.முதலில் ஆடைகள் , இங்க அலுவலகத்துக்கு முறைசார் உடைகள் (Formal Dress) கிடையாது , ஆனா அங்கே வாடிக்கையாளர் ஒரு வங்கி என்பதால் உடைகள் ரூபத்தில் வந்தது செலவு. அடுத்து வங்கியதை வைக்க பெட்டிகள், பின்பு சமைக்க மசாலாக்கள்  , மின்சமையல் அடுப்பு என்று ஒரு அரை இலட்சம் பழுத்துவிட்டது. இங்கே , கவனிக்க வேண்டிய விடயமொன்று உலக கையடக்க மின்னேற்றி மற்றும் மின்மாற்றி கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் வேண்டும். (Universal Portable Charger/Converter).இல்லேன்னா , பப்பும் வேகாது , பருப்பும் வேகாது . எல்லாம் முடிஞ்சுதுன்னு இருந்தா , ஜெர்கின் வாங்க மறந்து கடைசி நேரத்தில் நண்பர் ஒருவரைத்  தொந்தரவு செய்து வாங்கி வரும்படி நேரிட்டது. ஆனா பாருங்க , வாங்குறது கூட பரவாயில்லை , அதை ஒழுங்கா அடுக்கி வைக்கப் பட்டபாடு சொல்லி மாளாது. இதுல , விமான நிலையத்துல எடை அதிகமுன்னு சொல்லி இன்னுமொரு முறை இடமாற்றம் செய்யவேண்டியதாகி விட்டது. அளவு (2*25 kg) பெட்டிகள் , மற்றும் ஒரு  தோலில் மாட்டும் பை ஆகியன மட்டுமே.

ஆங் , சொல்ல மறந்துட்டேனே , முக்கியமான சேதி . ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து அடிப்படையான மருந்துகள் அனைத்தையும் மருந்துச்சீட்டுடன் மறக்காமல்  வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் .

காலையிலே நாலரை மணிக்கு விமானம் , அதுவும் ‘முதல்’ விமானப் பயணம் வேறு. நேரமாக நேரமாக ‘ஜென்‘ நிலை ‘அதுக்கும் மேல ‘ நிலையானது. 22 மணிநேரப்பயணம். ஆச்சு , ஏறி உக்காந்தாச்சு . கடைசியிலே பேருந்து பிரயாணம் தோத்தது போங்க. முதலில் அபுதாபி, அங்கிருந்து லாஸ் ஏஞ்சலஸ்.

முதல் பயணத்திலேயே நமக்குன்னு வந்து வாய்ச்சது பாருங்க, இந்தப் பக்கம் அந்தப்பக்கம் திரும்பக்கூட முடியாதபடி ஒரு அரேபிய பெரியவர் நமது பக்கத்துக்கு இருக்கையை ஏகபோக உரிமையாக எடுத்துக்கொண்டார் . அப்புறம் எப்படி முதல் பயணம் – காலத்துக்கும் மறக்காது.

பாவம் அந்த அரேபியப்பெரியவர்தான் கடைசியிலே மயக்கம் போட்டு சுயநினைவை இழந்துவிட்டார்.

ஆனாலும் வானத்துல பறக்கிறதே ஒரு அலாதியான விசயமில்லையா? அந்தரத்துல அதுவும்  ஜன்னலோர இருக்கை, அதுக்காக மத்ததையெல்லாம் தாங்கிக்கலாம். முக்கால் மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதால் அபுதாபியில் மாற்று விமானத்தை அனைவரும் விடவேண்டியதாயிற்று. நல்லவேளை நிறைய பேர் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் லாஸ் வேகாஸ் போக வேண்டியவர்கள் நிறைய பேர் இருந்ததாலும் , மாற்று விமானமும் வந்த எட்டிஹாட் விமான சேவையைச் சேர்ந்தது என்பதால் அவர்களே வேறு வழியாக (டுல்லாஸ் போய் அங்கிருந்து லாஸ் ஏஞ்சலஸ் )  பயண மாற்றம் செய்து கொடுத்தனர்.

WP_20150220_11_08_47_Pro

ஆனால் அதற்கும் ஓடிய ஓட்டம் இருக்கே , அப்பாடி வாழ்நாள் முழுக்க மறக்காது. பாலைவனத்தில் பாதிய வளைச்சு விமான நிலையத்தை கட்டி வச்சுருக்கானுங்க அரேபிய ஷேக்குகள். நல்லவேளை நமக்கு பேச்சுத்துணைக்கு ஒரு பொள்ளாச்சிக்காரர் கிடைத்தார். சொந்தமா பிசினஸ் பண்றவராம். எப்படியோ , பொழுது போக்கி, வாஷிங்டன் விமானத்தில் ஏறியாச்சு. எப்படிடா, 15 மணி நேரம் பயணம் செய்யப் போறோம் நெனைச்சுக்கிட்டு போனா, அங்க ‘இந்தியாவுக்கு’ சுற்றுலா வந்துட்டு திரும்பிய ஒரு அமெரிக்க குடும்பம் தாய், தந்தை , மகளுடன் நான்கவதாய் நான். சும்மா , சொல்லக்கூடாது. இந்தியாவில் ஆரம்பித்து, திருநீறு ஏன் பூசுறாங்க , குங்குமம் ஏன் வைக்குறாங்க ,  தாலி ஏன் கட்டுறாங்க , சாப்பாடெல்லாம் எப்படி, எங்கெங்கே போனாங்க, அவங்க குடும்பம் எப்படி (அந்தப்பொண்ணு இது என் அப்பா , அது அவங்க மனைவி என்று அறிமுகப்படுத்தியபோது ஏற்பட்ட சின்ன நெருடலைத்தவிர) என்று 15 மணிநேரம் போனதே தெரியவில்லை. இறுதியில் , ஒரு தாமி(செல்பி கீழே)உடனும் , அவர்கள் வீட்டு முகவரி கொடுத்து எப்போ வந்தாலும் மறக்காம வாங்க என்று சொன்னதோடு இனிய பயணம் முடிவுக்கு வந்தது.Taken with Lumia Selfie

அதோடு ஏதோ போனா போகுதுன்னு கொஞ்சம் ‘ஜிகர்தண்டா’வும் பாத்தேன் கொஞ்ச நேரம் 😛

WP_20150220_13_49_41_Pro

வாஷிங்டன் வந்திறங்கியாச்சு. அங்க -7 டிகிரி குளிர் வேற. ஏதோ விமான நிலையம்கிறதாலே தப்பிச்சுது. அங்க ஒரு 4 மணி நேரம் டேரா. பெருசா ஒண்ணுமில்லை, நம்ம கொண்டு போன  Universal Adapter வைத்து நடத்திய திருவிளையாடல் தவிர. அட , ஆமாங்க . ஒரு பகுதியையே பியுஸ் போக வச்சதுதான் மிச்சம். அங்கிருந்து ஐந்தரை மணிநேரப்பயணம் லாஸ் ஏஞ்சலஸ். நம்ம கூட வந்த பொள்ளாச்சிக்காரர்  பின்னாடி ஒரு புள்ளைய பிடிச்சு ஆன்மிகம் , வேலை , உலகம் , அறிவியல்ன்னு ஆராய்ச்சியில் இறங்க நான் நல்ல தூக்கம். கடைசியில் , என்ன பண்ணுனீங்கன்னு கேட்டா அந்தப்பொண்ணுக்கு மனஅழுத்தம் அதான் பேசி சரி பண்ணிக்கிட்டு இருந்தேன்கிறாரு.

ஒருவழியா 32 மணி நேரப் பயணம் முடிவுக்கு வந்து, தரையிறங்கும் போது இரவு 11.30. விமான நிலையத்தில் இருந்து , பசடேனா(Pasadena) செல்ல , மீசைக்கார மைகேல் வந்திருந்தார் , அலுவலகம் ஏற்பாடு செய்து வைத்திருந்த வாகனஓட்டி. அருமையான ஆளு. அப்பாடி , இன்னும் அரை மணி நேரம் தான் , நிம்மதியா போய் தூங்கலாம்ன்னு நினைச்சு இருந்தா அடுத்த திருவிளையாடல் ஆரம்பம். வண்டி ஏற்பாடு செய்து வைத்து இருந்த பயபுள்ளைக(அலுவலக அறிவாளிகள்தான் ) தங்கும்விடுதிய முன்பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஏதோ நம்ம மீசைக்கார மைக்கேலும் , நான் சென்ற விடுதியின் காப்பாளரும் இல்லையென்றால் அமெரிக்காவில் முதல் இரவே பிச்சைக்காரன் போல தெருவில் , குளிரில் தங்கவேண்டியதாகி இருந்திருக்கும். நல்ல வேளை, அவர்கள் உதவியால் வேறு ஒரு விடுதிக்குச் சென்று அறை எடுத்து நல்லபடியாக பயணத்தை நிறைவு செய்தாகி விட்டது.

இன்று , ஏறக்குறைய இரண்டரை மாதங்களாகி விட்டாலும் , வீட்டை விட்டு, நாட்டை விட்டு , சுற்றத்தை விட்டு, நண்பர்களை விட்டு , வெகுதூரம் வந்தாலும் , அங்கிருந்து வேறு வேறு வீடுகள் பார்த்து மாறிவிட்டாலும், நிறைய நண்பர்கள் கிடைத்தாலும் , முதல் அனுபவுமும் , முதலில் பார்த்த நல்ல மனிதர்களும் அமெரிக்காமீது ஒரு நல்ல மரியாதையை ஏற்படுத்திவிட்டது.

எதற்குமே‘ ஒரு நல்ல தொடக்கம் வேண்டும்தானே !

.Taken with Lumia Selfie

வாழ்த்துக்களுடன்
செ சதீஸ் குமார்

சிறுகண்ணீர்த்துளி

காலையில் ஐந்தேகால் மணிக்கு பாத்ரூம்ல உக்கார்ந்துட்டு என்னிக்காவது, யாராவது அழுதுருக்கீங்களா? இதோ இவன் அழுதுகிட்டு இருக்கான்,அதுவும் தேம்பித் தேம்பி. அதுதான் பாசம். ரொம்ப நாளா யோசிச்சி பாத்தான், அதைப் பண்ணலாமா, இதைப் பண்ணலாமான்னு. இருந்தாலும், ஏதோ ஒண்ணு தடுத்துக்கிட்டே இருந்தது. இவனும், இவன் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இன்னும் சொந்தம் வேணும் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவங்க பெரியம்மா வீட்டில்தான் ஏனோ முறுக்கிக்கொண்டு திரிகிறார்கள்.

அவன் என்ன முடிவு பண்ணினான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி,நான் யாருன்னு தெரியுமா ? நான்தான் பாத்‌ரூம்ல இருக்கிற பைப்(குழாய்), அதுவும் பெங்களூர்ல அவன் இருக்கும் வீட்டின் பாத்‌ரூம் பைப்தான். என்ன நம்ப முடியவில்லையா? அப்புறம் பிரச்சினைக்கு காரணமே நம்ம பங்காளி தானே, அதாவது இவன் ஊரில் உள்ள பொது தண்ணீர்க்குழாய்தான்.

வாங்க, இனி நம்ம பங்காளி வாயாலே கதையக் கேப்போம்.

நான்(பொது தண்ணீர்க்குழாய்) அந்த ஊருக்கு தண்ணீர் சேவை செய்ய வந்தது ஒரு பஞ்ச காலத்தின் கோடையில். ஊர் என்றவுடன், ஏதோ ரொம்ப பெருசுன்னு நினைச்சுடாதீங்க. மூணே மூணு குடும்பந்தான். அதுவும் பங்காளிகள். மூவரில் இருவர் அண்ணன், தம்பி, அவர்களுக்குள் பேச்சுவார்த்தை கிடையாது. ஒருவர் குடும்பம், பாத்ரூமில் அழுது கொண்டிருந்தவனுடையது.அந்த அண்ணன்,தம்பியுடைய அப்பாவும்,இவனுடய தாத்தாவோட அப்பாவும் அண்ணன் தம்பிகள். அதான் பங்காளி உறவு.ஊரில் மொத்தம் 12 பேர் தான் நான் வந்த போது. இப்போது, கூட ஒன்று.ஆக மொத்தம் 13. நடுவில், இறைவனின் திருவிளையாடலால் சில கூட்டல், கழித்தல்கள் அரங்கேறியது.

வீதியின் நடுவில் ஒரு மின்விளக்கின் அடியில் நான் எனக்கென்று ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொண்டேன். வீட்டுக்கு மேற்குப்புரம் நம்மாளுடைய வீடும், கிழக்குப்பக்கம் சின்னப் பெரியம்மாளுடைய வீடும் இருக்க, நடுவில் நான். சற்று தள்ளி, தெற்கில் பெரிய பெரியம்மாளுடைய வீடு. அதுவே, அவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது. நான் தள்ளி இருந்ததால், தனது தம்பி வீட்டார்தான், தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசதியாக என்னை வைத்துக்கொண்டார்கள் என்றெண்ணி இது நாள் வரையில் என்னிடம் தண்ணீர் பிடிக்க வரவேயில்லை.

நான் வந்த புதிதில், என்னிடம் தண்ணீர் பிடிக்க அதிகம் வந்தது, சின்னப் பெரியம்மா வீட்டில்தான். ஏனென்றால்,நம்மாளுடைய வீட்டில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை, இரண்டு போர் போட்டு இன்றளவும் வற்றாமல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் வீட்டுக் கிணறுதான் வற்றிவிட்டது. இதுநாள் வரையில்(நான் இல்லாதவரையில்), அந்தப் பையன் வீட்டுத் தொட்டியில்தான் தண்ணீர் நிரப்பி விடுவார்கள். சின்ன வீட்டில் வேண்டிய அளவு தண்ணீர் எடுத்துக்கொள்வார்கள். அட, வீட்டு முன்னாடி இருந்த மூன்று தென்னைமரங்களும் காய்ந்து போகாமல் இருந்ததே அந்தத் தண்ணியில்தானாம் நான் வரும் வரையில்.

நான் வந்த பிறகும், வாரத்தில் இரண்டு நாள் வரும் காவேரி தண்ணீரை முதல்ல பிடிப்பதே அவர்கள்தான். இத்தனைக்கும் நம்மாளுடைய வீட்டில் தண்ணீர் வருவதை யார் பார்த்தாலும் அவர்களைக் கூப்பிட்டுத்தான் சொல்லுவார்கள்.பாவம், தண்ணி இல்லாம கஷ்டப்படுகிறார்களே என்று. அவர்கள் வீட்டுத் தொட்டி , தென்னை மரங்கள் , புதுசா வைச்ச வாழை மரங்கள் , பூச்செடிகள் என எல்லாத்துக்கும் நீர் பாய்ந்தபிறகு தான் நம்ம பையன் வீட்டுக்கு போனால்போகுதுன்னு தருவார்கள். இதுக்கெனவே பினோலக்ஸ் ஹோஸ் பைப் வாங்கி வச்சுருந்தாங்கன்னா பாருங்களேன். சட்டம் அனுமதிக்காதுதான். இருந்தாலும் மூணு ஊடுதானே, யாரும் வரப்போவதில்லை, யாருக்கும் வைத்தெரிச்சல் இல்லை.

இப்படியாக ஒரு மூன்று வருடங்கள் எல்லாம் சுமூகமாகத் தான் போய்க்கொண்டு இருந்தது. அந்த நாள் வரை, யார் கண் பட்டதோ.இடையில் சின்ன வீட்டில் மகனுக்கு திருமணமாகி அண்ணி வந்து , அவர்களுக்கு ஒரு பையனும் பிறந்து இருந்தான். அண்ணிக்கு கவர்மென்ட் வேலை. அண்ணனும் எல்.ஐ.சி ஏஜென்ட். காசு சேரும் மெத்தனமோ இல்லை சுயநலமோ தெரியவில்லை. நம்ம பையன் சின்ன வீட்டுப் பெரியம்மாவிடம் கொள்ளைப் பாசம். பிறந்தது முதலே, ஊருக்கு ஒரே பொடியன் அல்லவா. அவன் வீட்டை விட சாப்பிட்டது, பொழுதை கழித்ததெல்லாம் சின்ன வீட்டில்தான். ஒருமுறை, பெரியம்மாவிற்கு தாளாத வயிற்றுவலி வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து கர்ப்பப்பை அகற்றி வீடு வந்தபோது ரோடுவரை கதறிக்கொண்டு ஓடி இரண்டுநாள் நிக்காமல் அழுது தீர்த்தவன்.

பல பிரச்சினைகளுக்கும் , தீராத, காலங்காலமாக தொடரும் பகைகளுக்கும் காரணம் தேடினால் ஒன்று கிடைக்கவே கிடைக்காது அல்லது காரணம் சின்னப்புள்ளத்தனமா இருக்கும். இங்கயும், அப்படி ஒரு காரணம்தான். வேற ஒண்ணுமில்ல, எங்கிட்ட தண்ணி பிடிக்க சின்ன வீட்டுப் பெரியப்பாவை நம்மாளுடைய தாத்தா காக்க வச்சுட்டாங்களாம். அவங்க ஒண்ணும் வேணும் பண்ணல. குடிக்க ஒரு குடம் தண்ணிதான் பிடிச்சாங்க. இப்படி ஆரம்பிச்சா பிரச்னை, நான் தனிய பைப் போட்டுக்கிறேன்னு எனக்கு ஒரு சக்களத்திய ஏற்பாடு செஞ்சு அவங்க வீட்டுக்குப் புது பைப் போட்டுகிட்டாங்க, சண்டைப் போட்டுக்கிட்டு. பேச்சுவார்த்தை நின்றது.

முன்புபோல், நம்ம பையனோட அம்மாவும் இருக்கிறது மூணு வீடு ,நாளைக்கு நல்லது கெட்டதுன்னா சொந்தம் வேணும்னு போக்குவரத்து வச்சுகிட்டு இருந்தாங்க. ஆனாலும், சின்னப் பெரியம்மா மூஞ்சியில் அடிச்ச மாதிரி ‘இனி, இங்க வர வேண்டாம்’ என்று சொன்ன பிறகு அவங்களும் போவதில்லை.
எல்லா விசயமும், நம்மாளுக்கு ஊருக்குப் போனாலோ அல்லது அலைபேசியிலோ வந்துவிடும். ஆனால் இவன் எதையும் தெரிந்தது மாதிரிக் காட்டிக்கொள்ளவில்லை. ஏன் இப்படி என்று கேக்கவுமில்லை. தொடர்ந்து பெரியம்மா வீட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தான். ஆடு பகை, குட்டி உறவு. ஒருமுறை, இவர்களுடைய வீடு மறுத்திருத்தம் செய்து ‘கணபதி ஹோமம்’ செய்த போது இவன் வீட்டில் எல்லோரும்போய் அழைப்பு வைத்தும் யாரும் வரவில்லை. அப்படியும் இவன் விடாமல் போய்க் கொண்டிருந்தான்.

பிரிதொரு நாள், இருவீட்டுக்கும் பொதுவான ஒரு பெரியவர் நான் இருக்கும் நிலம் நம்ம பையன் வீட்டாருக்குத்தான் சொந்தம் என்று சொல்லப் போக, அதையும் இவன் வீட்டார்தான் சொன்னதாக எடுத்துக்கொண்டு இன்னும் நெருப்பில் அவர்களாகவே எண்ணையை ஊற்றிக்கொண்டனர். அதன் பிறகு , பழிவாங்கும் செயல்களில் ஈடுபட ஆரம்பிக்க, இவனும் அவர்கள் வீட்டுக்குப் போவதை நிறுத்திக்கொண்டான்.

யார் சொன்னாலும் அங்கு போவதையோ அவர்களோடு பேசுவதையோ நிறுத்தாத அவனையே போகவிடாமல் செய்தது, எங்கே ‘நான் யாரை வேண்டுமானாலும் வேணாம்னு சொல்லுவேன் , உன்னை மட்டும் ‘எப்போவுமே’ வரவேண்டாம்னு என்னிக்கும் சொல்லமாட்டேன்’ என்று குரல் கம்மி சொன்ன சின்ன வீட்டுப் பெரியம்மாவே ‘நீ வராதே’ என்று சொல்லிவிட்டால் என்னாவது. வேண்டாம், அதுக்கு நாமளே போகாமல் இருந்துக்கலாம் என்று எண்ணி விட்டான். இதற்கு இடையில்தான், இவன் வேலை செய்யும் கம்பெனியில் இவனை அமெரிக்காவுக்கு போகச் சொல்லி நாள் குறித்து விட்டார்கள். அதிலிருந்து பையன் மனசுக்குள் குமைய ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு எப்படியாவது பெரியம்மாவிடம் சொல்லிவிட்டு போக வேண்டுமென்று ஆசை. ஆனால் , அவன் அம்மாவோ, ‘அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம், இந்த மனசோட அவங்க வாழ்த்தினா, போற காரியம் விளங்காது’ எனத் தடை போட்டு விட்டாள்.

மேலும் இப்போதெல்லாம் அமெரிக்கா போனால் நல்லது கெட்டதுக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் வரமுடியாது என்ற உறுத்தல் வேறு. இதையெல்லாம் யோசித்து யோசித்துத்தான் பையனை அப்படி அழவைத்தது. ஊருக்கு போன உடனே , அவனுடைய அண்ணிக்குப் போன் செய்து நான் பெரியம்மாவை பார்க்க வரேன் என்று மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு பதிலைக் கூட எதிர்பாராமல் அங்கு போய் நின்று விட்டான். ‘ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க, நான் அடுத்த வாரம் அமெரிக்கா போறேன். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க’ என்று காலில் விழுந்து கேட்டுக்கொண்டான் பெரியம்மாவிடமும், பெரியப்பாவிடமும். அவர்கள் கையை தூக்கி ஆசிர்வாதம் பண்ணியவுடன் விடுவிடுவென கிளம்பி இவன் வீட்டுக்கு வந்துவிட்டான். இவன் வீட்டிலும் யாரும் இது சரியென்றோ தப்பென்றோ எதுவும் கேக்கவில்லை. இனி இவன் நிம்மதியாக அமெரிக்கா செல்வான்.

பேசினாலே பாதி சண்டைகள் பகைமைகள் விலகிவிடும்.இங்கு என்ன நடக்கும் , பொறுத்திருந்து பாக்கத்தானே போறேன். ஆனா, நல்லது நடக்குமென்ற நம்பிக்கை இருக்கு. எப்பிடின்னு கேக்குறீங்களா ? காதைக் குடுங்க, ஒரு ரகசியம் சொல்லுறேன். ‘அந்தப் பெரியம்மாவின் கண்களில் ஒரே ஒரு சொட்டுக் கண்ணீர் நம்ம பையன் கால்ல விழுந்தபோது வந்ததை நான் பாத்துட்டேன்’. இப்போது, இந்த உலகத்துல தண்ணீருக்கு அப்புறம் கண்ணீருக்குத்தானே மதிப்பு.

நன்றி – என் சொக்கன்

வாழ்த்துக்களுடன்
செ சதீஸ் குமார்

மறுசுழற்சி

‘ம்க்கும்,நினைச்சுக்கிட்டே இரு, இப்பிடினு தெரிஞ்சா  ஒருத்தனும் உனக்கு பொண்ணு குடுக்க மாட்டான்‘ என்று சீறலாய் பதில் வந்தது என் ஆத்தாளிடமிருந்து(அப்பாவின் அம்மா).

‘என்னடா இது வம்பா போச்சு. காலம் போன காலத்துல, ஏன் இப்படி வாசல்ல கட்டிலைப் போட்டுக்கிட்டு கஷ்டப்படுறே? அதுவும் குளிர்காலம் வேற வரப்போகுது. மேவரம், நம்ம பழைய வீடு இருக்கு. அங்கயே வெள்ளையடிச்சு, ஒரு லெட்டின் போட்டுத்தந்துறோம் (நானும், அப்பாவும்),கஷ்டப்படாம இருக்கும்ல’ என்றோம். அதற்கு தான்,அப்படி ஒரு ஆங்காரம்.

நடை ஓய்ந்து விட்டது, கண்ணும் சரிவர தெரிவதில்லை. அதான்,அவங்களுக்கு ஒத்தாசையா இருக்குமுன்னு இப்படி ஒரு வழியைச் சொன்னா,அது நம்ம கல்யாணத்துல வந்து நிக்குது.

அது சரி, ‘எப்படின்னு தெரிஞ்சா?’ என்று கேட்டு வைத்தேன். ‘இப்படி,எங்களை மூலையில தள்ளி சோறு போடாம வச்சுருக்கா, உங்கம்மா’ன்னு தெரிஞ்சுக்கிட்டா’ என்று பதில் வந்தது. அந்தப் பேச்சு, அதோடு போனது.

இத்தனைக்கும் புது வீடு கட்டுவதற்காக ஆரம்பித்த போது, நாங்கள் இருப்பதற்காக கட்டிய ஓட்டு வீடு தான் அது. புது வீட்டை ஒட்டின மாதிரியேதான் இருக்கிறது, அங்கயே தான் இன்னமும் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் ஜாகை. சமையல் எல்லாம் புது வீட்டில்தான். தூக்கம் மட்டும் அங்கே. மத்தியானம் ஆடு முடுக்கிவிட்டு வந்து கட்டிலில் படுத்திருந்த அம்மாவிடம் ‘வர்ற பொங்கலுக்கு இந்த வீட்டை வெள்ளையடிச்சு, நடுவில இருக்கிற வண்டி நிறுத்தர சாலைய கொஞ்ச ஏத்தி, சீமெண்ட் ஷீட்டு போட்டு லெட்டீன் ஒண்ணு வச்சுக்குடுத்துடுவோம், அவங்க ரெண்டு பேரும் படுத்துக்குவாங்க. முத வேல , இங்க இருக்கிற பீரோவையும், உங்க கட்டலையும் அந்தூட்டுக்குக் கொண்டு போறதுதான்’ என்றேன்.

அதற்கு  ‘ஏ, அப்படியே வந்துடுவாங்க அவங்க, முடிலைனாலும் நாலு காலுல மண்டி போட்டுட்டு அங்கயே அழிச்சாட்டியம் பண்ணுவாங்களே ஒழிய இங்கெல்லாம் வரமாட்டாங்க, இப்படியே அசிங்கறம் புடிச்சாப்பல போட்டு வச்சு இருந்தா வரவனெல்லாம் பாத்துட்டு போய் சொல்லுவான்ல. அதான் ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்கிது ஒரு வருஷமா’ என்று பதில் வந்தது.

எனக்கு வேணும்தான். இங்கயும் அதே பேச்சு. இதுக்கும் கல்யாணத்துக்கும் என்னங்க சம்பந்தம். உனக்குக் கல்யாணமே ஆகாது போலயே என்று விசனம் வந்து தொத்திக் கொண்டது, எனக்கு.

‘புது ஊடு கட்டி, பதினாறு வருசமாச்சு, இல்லாதவனெல்லாம் இன்னிக்கு என்ன ஆட்டு ஆட்டுறான், நான் உங்கள இருக்கறத அனுபவீங்கனுதான் சொல்லுறேன். அப்புறம், உங்கிஷ்டம்’ என்று சொல்லிவிட்டு மாமா ஊருக்குக் கிளம்பி வந்து விட்டேன்.

மாமா ஊருக்கு வந்தது, அம்மாட்சியைப் பார்க்க. (அம்மாவுடைய அம்மா), கன்னுகுட்டியைப் பிடிக்கப்போய் குடுவையை உடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிறது.

நாங்கெல்லாம் போனால், ஒரு ஆறுதல். கிடையிலேயே கிடக்கிற சீவனல்லவா. இரண்டு தடி போட்டுக்கொண்டு வீட்டுக்கும் பக்கத்தில் உள்ள சாலைக்கும் நடை ஓடிக்கொண்டு இருந்தது.

‘கடையில இருந்து எப்போ வந்தே’?’.

நான் என்னதான் மென்பொருள் துறையில் வேலை செய்தாலும் ஆத்தாளுக்கு அது கடைதான். ஒரு காலத்தில் ஊரில் உள்ளவங்க எல்லாம் கேரளா போய் வட்டிக்குவிட்டு சம்பாரிக்க ஆரம்பித்து, அவர்களை எல்லாம் ‘கந்துக்கடை’க்குப் போய்ட்டாங்க, என்று சொல்லும் வழக்கு ஆரம்பித்ததால், வெளில என்ன வேலைக்குப் போனாலும் ஊரிலுள்ள பெருசுகளுக்கு அது ‘கடை’தான்.

‘நான்,நேத்தே வந்துட்டேன்’ என்றேன். ‘அண்ணன் ஊட்டுக்குப் போனீயா? ஏதோ விருந்தாம்ல?’ அதோடு விட்டிருந்தால் பரவாயில்ல. அடுத்து வந்ததுதான் ‘விடாது கல்யாணம்’ ரேஞ்ச். ‘ஏதோ, அவனுக்கு இத்தன வருஷம் கழிச்சு ஒண்ணப் பாத்துப் புடிச்சுக் குடுத்தாச்சு. உனக்கும் , கதிருக்கும்(மாமா பையன்) ஒண்ணப் புடிச்சிட்டா , அத பாத்துட்டு கண்ணை மூடிடுவேன், எப்போ ஆகப் போகுதோ’. சுத்தம்,இங்கையுமா! ஈஸ்வரா. ‘சேரி, இனிமேல பொறக்கப்போறா? உடுங்க , பாத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு விட்டால் போதுமென ஊட்டுக்குள்ள ஓடியாந்துட்டேன்.

வீட்டுக்குள்ள போய் காபி குடிச்சிட்டு, மாமா, அத்தையிடம் பேச ஆரம்பிக்கையில், மாமா ‘வண்டி ஓடுதா?’ என்றார்.

நானும்’ ஓடுது, அதுல(புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனம்)தான் ஆபீஸ் போறேன்’ என்க, ‘அப்போ,கார் வாங்கற மாறிலாம் ஐடியா இல்லயா?’ என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது.

எப்போ வந்தாலும், ஒரு தடவையாவது இந்தக் கேள்வி வரும். இது எங்கு போய் முடியுமென்றும் தெரியும். இருந்தாலும் ஒப்புக்கு ‘பெங்களூர்ல இருந்தப்போவே வாங்கலியாம். இப்போ, அங்க(அமெரிக்கா) போறப்போ எதுக்கு? இங்க யாரு ஓட்டுறா?’ என்றேன்.

உடனே ‘ ஏதோ அது இருந்தா, இந்தக் கிழடு கட்டைகளை ஏதாவது ஒண்ணுன்னா நாங்க தூக்கிப்போட்டுக்கிட்டுப் போவோம்ல? நீ, மாமனாரு சீருக்கு ஆசைபபட்டுட்டே போல, உடு, உடு. அப்படியெல்லாம், பொண்ணுக் கிடைக்கறது இந்தக் காலத்துல கஷ்டம்டோ‘ என்றார். இங்கயும், அதே கதைதானா. ச்சை, நம்ம கல்யாணம் எல்லோருக்கும் பேசு,விளையாட்டுப்பொருளாக ஆகிவிட்டது.

விதியை நொந்து கொண்டேன். ஆண்டவா இதுக்காகவாவது ஏதாவது நடந்தால் தேவலை என்று இருந்தது. அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வரும் வழியில், தெரிந்த அத்தையும், அவர்கள் பையனும் வண்டியில் வந்து கொண்டு இருந்தார்கள். சொந்தம்தான், என்ன கொஞ்ச தூரம்.

நிறுத்தி நலமெல்லாம் விசாரித்தானபின்பு ‘என்ன பொண்ணு கிண்ணு பாக்கறாங்களா?’ என்று அத்தை ஆரம்பிக்க,

வந்துதுடா வினை, ‘பாக்கறாங்க, பாக்கறாங்க, எங்க ஜாதகமே ஒண்ணும் செட்டாகல’ என்றேன். ‘ஏதாவது அங்கயே பாத்து வச்சுட்டியா?’ ‘நீங்க வேற, பாத்து வச்சுருந்தா நான் என் இவ்ளோ நாள் வெயிட் பண்ணுறேன். ஒரு நாலு, அஞ்சு வருசம் முன்னாடியே கலியாணம் மூச்சுருப்பேன்’ என்று பல்லைக் காட்டினேன்.

‘ஓ , அப்படியா அப்போ கல்யாணம் ஆகறது கொஞ்சம் சிரமம் தான்‘ என்று அவங்க பங்குக்கு கொளுத்திப் போட்டுவிட்டு ‘சேரி, நாங்க கிளம்பறோம்’ என்றார்கள். பெரிய கும்பிடாகப் போட்டு விட்டு, ‘போய்ட்டு வாங்க’ என்று வழியனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

காலையிலிருந்து சனி என் கல்யாணத்தைப் பிடிச்சுட்டு இருக்குதே. என்ன பண்ணுறது, யாருகிட்டையாவது பேசினால் தேவலாமென்று இருந்தது. கழுதை கெட்டா குட்டிச்செவுரு, நமக்கு அவன்தான். ரொம்ப உற்ற துணைவனான நண்பனுக்கு அலைபேசினேன்.

ஊரு கதை, உலகக் கதையெலாம் பேசியானபின் ‘ஆமா, வீட்டுல என்ன ஸ்பெஷல்’ என்றான்.

‘ஒண்ணுமில்ல, எப்போவும் போல’ என்று ஆரம்பித்து ‘எல்லோரும் என்னோட கல்யாணத்தைப் பத்தியே பேசுறாங்காடா’ என்றேன்.

அவன் என்னடான்னா ‘ஆமா , ஏதோ மேட்ரிமோனில ரிஜிஸ்டர் பண்ணினியே, ஆன்லைன் அகௌன்ட் இருக்குல்ல? நீயா போய் பாத்து விருப்பம் தெரிவிக்க வேண்டியதுதானே?’ என்று கேட்டான். நானோ ‘எங்கடா நேரமில்ல’ என்றேன். உண்மையில் அதிலெல்லாம் இன்னும் பெரிதாக ஆர்வம் வரவில்லை.

ஆனா, அவனோ ‘போ, உன்னைத் தேடி வருவாளாக்கும், நீயெல்லாம் கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போறீயோ?’ என்று வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சினான். ‘ஹ்ம்ம்ம், உன் ஃப்ரெண்டு தானே, அப்படித் தான் இருப்பேன்’ என்று சொல்லிவிட்டு கட் பண்ணிவிட்டேன்.

நல்ல நாளு. முடிஞ்சுது. ஊரில் இருக்கும் சில பல நாட்கள் இப்படியே தான் கழியும்.இதற்கு அப்புறமும் இதே போல சில மாதங்களை ‘உனக்கெல்லாம் எங்க கல்யாணம் ஆகப் போகுது‘ ரீதியில் ஒட்டிவிட்டு இடையில் அமெரிக்கா வேறு அலுவல் நிமித்தமாகப் போய்விட்டு வந்த நிலையில் ஒரு ஆறு,ஏழு மாதம் கழித்து ஒரு சுபயோக சுகதினத்தில் வைகாசி மாதத்தில் எனது பாதியை(அதாங்க பெட்டர் ஹாஃப்) திருமணம் செய்து கொண்டேன்.

கல்யாணம் ஆகி ஆசையெல்லாம் முடிந்த அறுவதாவது நாளையெல்லாம் தாண்டி ஒரு நாள், என்னவள் ‘நீங்கெல்லாம் கல்யாணம் பண்ணி என்ன பிரயோஜனம், ஒரு காய்கறி வாங்கத் தெரியுதா?’ என்றாள். ‘டீ, நானெல்லாம் அப்போவே ரூம்ல சமைக்க நாலஞ்சு பேருக்கு காய்கறி வாங்கிட்டு வந்தவன்’ என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை. சொல்லிடுவீங்க?

வாழ்க்கை ஒரு வட்டம், அடுத்த வட்டம்  எனக்கு ஆரம்பமாகிவிட்டது. இனி என் மகனோ, மகளோ வந்து ‘என்ன அப்பா நீயி‘ என்று அடுத்த வட்டத்தை ஆரம்பிக்கும்வரை இதன் தொடர்ச்சி இருக்கும். நீங்கெல்லாம் எந்த வட்டத்துல இருக்கீங்க இப்போ ?

நன்றிகள் பல –என் சொக்கன்

வாழ்த்துக்களுடன்
செ சதீஸ் குமார்